Thursday, May 16, 2013

"தடுமாற்றம்"


தனிமையில் ஒரு தருணம்!

இளைப்பாற ஒரு இடம் தேடி....

சுற்றி எங்கும் வெட்டவெளி....

அனல் பறக்கும் வெயில்.....

நிழல் தேடி என் பயணம்..

தொலை தூரத்தில் ஒரு மரம்...?

எனக்காக என்னைப்போல் அதுவும் தனிமையில்....?

மனதில் சிறு சந்தோஷம்......!

இளைப்பாற இடம் இதுவே.....

அருகில் சென்றதும் கணத்து போனேன்..?

என்னை போல் அதுவும் வறுமையில்.....!

தன் வாழ்வை இழந்து .....?

வெறும் பட்ட மரமாய் நின்றது....

எனக்கு நிழல் கூட கானல் நீர் தான்...?




"என் வாழ்வில் ஏமாற்றங்களும், தடுமாற்றங்களும் மட்டுமே......"


என்றும் புன்னைகையுடன்,

பிரதீஷ் ஜாண்போஸ்கோ..